October 12, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இய‌ற்கை வைத்தியம்!

22 min read
மாதுளை, health, digestion, digestive, digestion problem, health problem, health, organic, natural, food,

 alt=

அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான். குறிப்பாக பைல்ஸ் வந்துவிட்டால், அதனை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான மருந்துகளையும் உட்கொள்ளலாம். இல்லையெனில் ஒருசில வீட்டு மருந்துகளைக் கொண்டும் சரிசெய்யலாம். இப்போது அந்த பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.

மாதுளை தோல் இந்த சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ் நீர் வறட்சியும் பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, பைல்ஸ் சரியாகிவிடும்.

அத்திப்பழம் அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.

வெங்காயம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரி செய்து விடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.

மஞ்சள் மசாலா பொருட்களில் காயங்களை குணப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. எனவே மஞ்சளை சூடான நீரில் கரைத்து, தினமும் குடித்து வந்தால், பைல்ஸ் இயற்கையாக சரியாகிவிடும்.

மலம் கழிக்கும் போது சரியான நிலையில் லேசாக அடிவயிற்றை அழுத்தும் படியாக உட்கார்ந்து செல்ல வேண்டும். அவ்வாறு சரியான நிலையில் உட்கார்ந்து செல்வதால், மலக்குடலுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுத்து, கஷ்டப்பட்டு செல்ல வேண்டி இருக்காது. இதனால் பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

மலச்சிக்கலை தடுத்து, இரத்த சுழற்சியை சீராக்க, தினமும் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் மிகவும் கடினமாக இருக்கும் உடற்பயிற்சியான எடை தூக்குதல் போன்றவற்றை செய்யவே கூடாது. அதற்கு பதிலாக வாக்கிங், ஜாக்கிங், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

வாழைப்பழம் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதிலும் இதை இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மறுநாள் காலையில் எந்த ஒரு கஷ்டமுமின்றி கழிவுகளை வெளியேற்றலாம்.

பருப்பு வகைகள் பருப்பு வகைகளில் காராமணி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் மலச்சிக்கலானது பொதுவாக வயிறு உப்புசத்துடன் இருந்தால் ஏற்படுவது. இதற்கு பழங்களில் ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட்டால், அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

பாப்கார்னில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணம். ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, மற்ற பிட்சா, சாண்ட்விச் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, பாப்கார்னை சாப்பிட்டால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

உலர் பழங்கள் பழங்களை விட உலர் பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. அதிலும் உலர்ந்த திராட்சை, பேரிச்சை, ஆப்ரிக்காட் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, சோர்பிட்டால் என்னும் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. இது பொருளானது உணவுப் பொருட்கள் செரிமானமடையும் போது உண்டாகும் திரவத்தை, குடலின் வழியாக வெளியேறும் மலத்தை லேசாக்கி, எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

தானியங்கள் அனைவருக்குமே தானியங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன என்பது தெரியும். ஆகவே இந்த பொருட்களை உணவில் சேர்ப்பது நல்லது. அதிலும் கோதுமையால் ஆன சப்பாத்தியை சாப்பிட்டால், மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்கும்.

ப்ராக்கோலி நார்ச்சத்தின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ப்ராக்கோலி எனலாம். ஏனெனில் இதில் அந்த அளவில் நார்ச்சத்தானது நிறைந்துள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க முடியும்.

பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அரைக் கப் ஸ்ட்ராபெர்ரியில் 2 கிராமும், ப்ளாக்பெர்ரியில் 3.8 கிராமும், ராஸ்ப்பெர்ரியில் 4 கிராம் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் கலோரிகளும் குறைவாக உள்ளன. ஆகவே இவற்றை சாப்பிட்டால், குடலியக்கம் நன்கு இயங்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

நட்ஸ் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் நட்ஸ் வகைகளும் ஒன்று. ஆகவே நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, இதனை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், வயிற்றில் உண்டாகும் உப்புசம் நீங்கி, மலச்சிக்கலை தடுக்கலாம்.

http://www.thamizhil.com/

உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 3.8 கிராம் நார்ச்சத்தை பெறலாம். அதிலும் இனிப்பு உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 4.8 கிராம் நார்ச்சத்தானது உடலுக்கு கிடைக்கும். ஆகவே உருளைக்கிழங்கை சாப்பிடும் போது தோலை நீக்காமல், வேக வைத்து, மசித்து, ஒரு பொரியல் போன்று செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இய‌ற்கை வைத்தியம்!

சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும்.

சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் இவைகளைப் பொடித்து ஓரளவில் எடுத்து அதே அளவு சர்க்கரை சேர்த்து காலை, மதியம் இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வாயுவினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

வாயு தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

வயிற்று வலி: வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

#thamizhil #thamizhildotcom

http://www.thamizhil.com/

 

Leave a Reply

Your email address will not be published.