September 13, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

வேம்பு!

8 min read
வேம்பு

வேம்பு 

புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
ஆமாப்ப பட்டையைத்தான் வெட்டிவந்து
அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
கொண்டிடவே யனுபான வகையைக்கேளு

மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே

நந்தீசர் சகலகலை ஞானம் -1000

நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார்.

தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும் இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு இரண்டும் சமமாகக்கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும் இதை வெயிலில் வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும்.

இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று பெயர் இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு “வேம்பு கற்பசூரணம்”என்று பெயர் இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ ஸ்பூன் அளவு)எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை)என நாற்பது நாள் உண்ணவும்.

இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும் ,பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இளவயது தோற்றம் பெரும், மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு பேரின்பசித்தி கிட்டும் மற்றும் ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த “வேம்பு கற்பம்” உண்டவனைக் கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்.

இப்படி மகத்துவம் வாய்ந்த “வேம்பு கற்ப சூரணம்”செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே.

Leave a Reply

Your email address will not be published.