July 27, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

தேங்காய் உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு உணவு!

5 min read
தேங்காய்
தேங்காய்இப்போ எல்லாம் டாக்டர்கள் ,தேங்காய் சட்னி சாப்பிடாதீங்க.. தேங்காயை உணவில் சேர்த்துக்காதீங்க..கொழுப்பு என்கிறார்கள்…இது ஒரு செம காமெடி..தேங்காய் உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு உணவு..கோயில்களில் பிரசாதமாக தேங்காயும் பழமும் கொடுக்கிறார்கள்…கெட்ட கொழுப்பு பொருளை கடவுள் பிரசாதமாக தரும் அளவுக்கு நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல…

தேங்காயில் உடலுக்கு தேவையான அனைத்து தாது பொருட்களும் இருக்கின்றன…. பழங்காலத்தில் எந்த நோயாக இருந்தாலும் பனங்கருப்பட்டியையும் ,தேங்காய்ப்பாலையும் தான் வைத்தியர்கள் கொடுப்பார்கள்..சுக்கு ,கருப்பட்டி சேர்ந்த அந்த கலவை மற்றும் தேங்காயை பிழிந்து எடுக்கப்பட்ட பாலுக்கு எந்த நோயையும் முறித்து குணமாக்கும் சக்தி உண்டு….அஜீரணம்தான் அனைத்து நோய்களுக்கும் அடிப்படை…தேங்காய் அதை இல்லாமல் செய்வதால்தான் சமையலில் அது இல்லாமல் எந்த உணவும் தமிழர் உணவில் இல்லை…..

தேங்காய் கெட்ட கொழுப்பு அல்ல..நல்ல கொழுப்பு..மிருகங்களில் இருக்கும் கொழுப்பும் தேங்காயில் இருக்கும் கொழுப்பும் ஒன்றல்ல…உலகில் சுத்தமான நீர் தேங்காயில் இருக்கும் நீர்தான்..முன்பெல்லாம் சாககிடக்கும் தாத்தா,பாட்டிகளுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து பிழைக்க வைப்பார்கள்..இப்போது எல்லாம் மாட்டுப்பால் கொடுத்து சாகடிக்கிறார்கள்….தேங்காய் அதிகம் சாப்பிட்டால் மட்டுமே கொழுப்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும் என்பதே உண்மை..!!

Leave a Reply

Your email address will not be published.