நல்லா தூங்கினா போச்சு ஹாச்ச்ச்…!
4 min read
“ஹாச்…’ என்று ஒரு முறை தும்மினால் போதும், அடுத்த ஒரு வாரத் துக்கு சளி, சனியாகப்பிடித்துக் கொண்டு விடும். ஜலதோஷம் வந்து விட்டால்போதும், மூக்கே சிவக்கும் அளவுக்கு சிலர் பிழிந்து எடுத்துவிடுவர்; கர்சீப்பை எல்லாம் நனைத்து விடுவர். ஒரு உண்மையை மறந்திருப்பர்; தூங்கி எழுந்தவுடன் ஜலதோஷம் குறைந்திருக்கும். இதை பலர் கவனித்திருக்க மாட்டர். தூக்கம் குறைவாக இருந்தால், அதுவே, ஜலதோஷத்துக்கு நண்பன். ஹாச்ச்ச்…இன்னும் அதிமாகி விடும். நன்றாக தூங்கினால், வெகுவாக குறைந்து விடும். இது தான் அமெரிக்க உறக்கவியல் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு.
“நன்றாக எட்டு மணி நேரம் தூங்குவோருக்கு ஜலதோஷம் வருவது அரிதாகவே இருக்கும். தூக்கமில்லாமல் இருப்போருக்கு அடிக்கடி ஜலதோஷம் வர வாய்ப்புள்ளது. தூங்கி விட்டால், ஜலதோஷத்தை பரப்பும் கிருமிகள் ஒடுங்கி விடுகின்றன. அவை குறைந்து விடுவதால் மீண்டும் எழுந்திருக்கும் போது, ஜலதோஷத்தின் வீரியம் குறைந்து விடுகிறது என்றும் நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். உங்களுக்கு ஜலதோஷம் வந்தால் இப்படி முயற்சி பண்ணிப்பாருங்களேன்!