March 28, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை

9 min read
உணவு, நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம், blood pressure, cancer, liver damage, liver, heart, Food, Life, Dont after meal

நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை

உணவு, நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம், blodd pressure, cancer, liverdamage, liver, heart, summer Diseases

வரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும் நோய்களான நீரிழிவு,கேனசர் இரத்த அழுத்தம், இதயம் பிரச்சினை போன்ற அனைத்து நோய்களும் வராமல் தடுக்க சித்தர்கள் வழியில் ஒரு வழி உள்ளது இதைப்பற்றித் தான் இந்த பதிவு.

எல்லா மதங்களிலும் விரதம் என்று ஒன்று வைத்திருந்தனர் இதன் காரணம் என்னவென்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் நமக்கு புரியும். மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே இந்த விரதங்கள் நமக்கு முன்னோர்கள் கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.எல்லா மதங்களிலேயும் விரதம் என்று சொன்னதும் நமக்கு உடனே தோன்றுவது உண்ணா நோன்பு. முதன் முதலில் உண்ணா நோன்பு எப்படி அனுசரித்தனர் என்பதை பற்றி பார்ப்போம்.

உண்ணா நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பது மட்டும் அல்ல. இதில் பல சூட்சமங்கள் நிறைந்துள்ளது. உதாரணமாக உண்ணா நோன்பு மொத்தம் 7 நாட்கள் இருக்க வேண்டும். நோயாளிகள் தவிர யார் வேண்டுமானாலும் இருக்கலாம் முதல் நாள் தோலுள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( வாழைப்பழம், மாம்பழம்,சப்போட்டா பழம்). இரண்டாம் நாள் சாறு உள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும் ( ஆரஞ்சு,திராட்சை,எலுமிச்சை). மூன்றாம் நாள் வெறும் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும் நான்காம் நாள் ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஐந்தாம் நாள் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும். ஆறாம் நாள் சாறு உள்ள பழங்களை உண்ணவேண்டும்.ஏழாம் நாள்
தோலுள்ள பழங்கள். இது தான் உண்ணா நோன்பின் முறை நாளடைவில் இது விருப்பதுக்கு தகுந்தபடி மாறிவிட்டது. இதைப்பற்றி நமக்கு பல சந்தேகம் வரலாம் ஒரு வேளை பசி என்றாலே நம்மால் தாங்க முடியவில்லையே 7 நாட்கள் எப்படி சாப்பிடாமல் இருக்கப்போகிறோம் என்று தோன்றினாலும் கண்டிப்பாக நம்மால் இருக்க முடியும்.

இதில் மறைந்திருக்கும் உண்மையை பற்றி பார்ப்போம் முதல் நாள் நாம் சாப்பிடும் தோலுள்ள பழங்கள் நம் மலக்குடலை சுத்தப்படுத்தும் கழிவுகளை நீக்கும். இரண்டாம் நாள் நாம் சாப்பிடும் சாறுள்ள பழங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மூன்றாம் நாள் நாம் அருந்தும் தண்ணீர் நம் உடலில் எந்த பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதை குணப்படுத்தும். (System Recovery).நான்காம் நாள் நம் உடல் ஒன்றுமே கேட்பதில்லை வயிறு பசிப்பதில்லை. ஐந்தாம் நாள் தண்ணீர், ஆறாம் நாள் சாறு உள்ள பழங்கள் , ஏழாம் நாள் தோலுள்ள பழங்கள். சிறு பூனையை எடுத்துக்கொள்வேம் தனக்கு நோய் வராமல் இருக்க சில நாட்கள் அது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துகிறது. நம் உடலும் பெரும் நோய் தாக்காமல் தடுக்க இதைப்போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இயற்கை மருத்துவரிடம் ஆலோனை பெற்ற பின் உண்ணா நோன்பு இருப்பது நல்லது. விரதம் இருக்கும் நாட்களில் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.