October 26, 2021

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

வெந்தயம்/வெண்தயம்

12 min read

வெந்தயம், Fenugreek, வெண்தயம், குளுமை

மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
1)பாலூட்டும் தாய்மாரின் பாற்சுரப்பைக் அதிகரிக்கும்
2)காலையில் சிறிதளவு வெந்தயமும் தண்ணீரும் குடித்துவந்தால் பல குடல் தொடர்பான நோய்கள் அணுகாது

3)கரண்டி [ 100 கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன்னிறத்தில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து , பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

4)கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு ,[50 கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும். அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு போத்தலில் போட்டு வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.

5)வயிறு உப்புசமாகவோ ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த  வகை பொடியை 1 கரண்டி +கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.

6)தினமும் காலையில் [ ௩] வகை பொடியை மோரிலோ , தண்ணீரிலோ கலந்து குடிக்க குருதியிலுள்ள சீனி கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில் குடிக்கணும்.

7)பேதி போகும்போது மோரில் [ ௩] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.

8)முட்டு வலி இருப்பவர்கள் [சீனி இல்லாதவர்கள்] 1 கரண்டி [ ௩ ] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
9) சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி கழிப்பறை போக தோன்றும். ( சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [ ௩ வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 குவளை நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல் எடுத்து செல்லவும்.

10) குருதியிலுள்ள சீனி + இரத்த அழுத்தம் குறைய , முழு வெந்தயம்- கரண்டி , பாசிபயறு- 2 கரண்டி , கோதுமை- 2 கரண்டி , இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி , மறுநாள் காலை மிளகு- 2, சிறிது கல் உப்பு , கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து , காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம் , சீனி நன்றாக குறையும் , ருசிக்கும் குறைவில்லை.

11) வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சீனி உள்ளவர்களுக்கு நல்லது.

12)வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி , மிளகாய்பொடி , மஞ்சள்பொடி , பெருங்காயதூள் , உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி , வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி சூப்பர். ( வெந்தய கீரையை சுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம். அதன் பலன்களுக்கு தனி புத்தகமே போடலாம்)
எந்த வகை ஊறுகாய்க்கும் [ ௪ வகை] பொடி சேர்க்கவும்.

13)குவளை இட்லி அரிசி , 1/2 குவளை வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன்னிறத்தில் இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.

14)குவளை புழுங்கல் அரிசியுடன் ,1/2 குவளை உளுந்ந்து , 1/2 குவளை வெந்தயம் இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- கரண்டிவெந்தயம் ஊற வைப்பதும் நல்லது.

15) தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 கரண்டிவெந்தயத்தை தண்ணியுடன் விழுங்கினால் , உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சீனி உள்ளவர்களும் சாப்பிடலாம். சீனி குறையும்.

16)முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள் காலை அரைத்து , தலையில் வைத்து ஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *