திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில்...
நிர்வாகி
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும்...
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து...
சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது....
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை...
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.இதனால் உண்டாகும் வலியானது, வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி...
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து...
இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய...
மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை...
நீரிழிவு நோய் : நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள் . இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து . இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும் . ஒரு கிராம் அளவு தூளை , காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும் . படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும் . ரத்தப்போக்கு : பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு . இதற்காக , 10 சென்டி மீட்டர் நீளமும் , 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்த பட்டையை நன்கு நசுக்கி , 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும் . அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி , பின் ஆற வைத்து குடிக்க வேண்டும் . தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம் . சிறுநீர் எரிச்சல் : சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும் . இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள் . இப்படிப்பட்டவர்கள் , நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் . அதனுடன் , ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும் . தினமும் காலை , மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும் . சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும் . நீர்க்கட்டும் பறந்தே போய்விடும் . பேதி: நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து , ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும் . காலை , மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம் . தொண்டைப் புண் , தொண்டை அழற்சி : 10 சென்டிமீட்டர் நீளமும் , 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும் . இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும் . கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர் , பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும் . தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண் , தொண்டை அழற்சி குணமாகும் . பிற பயன்கள் : * நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம் , பசியை தூண்டும் தன்மை உண்டு . மேலும் , நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு . * தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல் , இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும் . * நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு . * நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும் , மூச்சுக்குழல் அழற்சி , காசநோய் , குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு . * இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது .