March 29, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்?

22 min read
வளைகாப்பு, Pregnant, Kids, child, child birth, labor pain,

 

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?

அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித்து மும்மூர்த்திகளையும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.

கும்பம்

கங்கை புனிதமானது. எல்லாவற்றையும் தூய்மை செய்வது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின்றன. ஆகையால், மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபட வேண்டும்.

ஓமம்

அனைத்துக்கும் அக்னியே சாட்சி. ‘நீயே உலகுக்கொரு காட்சி’ என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லையானால் உயிர் நிலைபெற மாட்டாது. இதனால் அக்னியை வழிபட வேண்டும். ஓமப்புகை ஆயுளையும் வளர்க்கும்.

நவகோள் வழிபாடு

ஞாயிறு முதலிய நவகோள்கள் இந்த உலகை இயக்குகின்றன. அதனால், நவகோள்களை வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்களின் நல்லருள் துணை செய்யும்.

மாப்பிள்ளை அழைப்பு

பெரும்பாலும் பெண்கள் வீட்டில்தா‎ன் திருமணம் நடக்கும்.இந்த காலம் போல் ‏இல்லாது,அப்போது மற்றவர்கள் சுகம்,துக்கத்தில் அந்த அந்த ஊர்கார்ர்கள் பங்கு கொள்வதுடன் நல்லது,கெட்டது ‏இவற்றை மற்றவர்களுட‎ன் கலந்து கொள்வார்கள்.தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையை முதல் நாள் ‏இரவு ஊரை சுற்றி தனியாக அமர வைத்து கல்யாணம் நடைபெறும் ‏‏இடத்திற்கு அழைத்து வருவார்கள்.அப்போது அந்த மாப்பிள்ளையை பார்க்கும் ஊர் மக்கள் யாராவதுஅவரை பற்றி வெளியூர் சென்றவர்கள் விபரம் அறித்தவர்கள், ஏதாவது நல்லது கெட்டது பற்றி அறிந்திருந்தால், அதை எனக்கு உட‎ன் தெரிவிக்கவும் என்று கூறாமல் கூறுவதற்க்கு தான் இந்த சடங்கு. அப்படி கெட்ட செய்திகள் ஏதாவது மாப்பிள்ளையை பற்றி அறிந்தால் உட‎ன் அந்த செய்தியை, மணமகள் வீட்டாருக்கு தெறிவித்து திருமணத்தை நிருத்தி விடுவார்கள்.நமக்கு ஏன் ஊர் வம்பு எண்று ஒதுங்கவும் மாட்டார்கள்,பொய்யான தகவலும் தரமாட்டார்கள்.அதனால் தான் திருமணத்திற்க்கு முதல் நாள் இந்த சடங்கு செய்யப்பட்டது.

தாலி/மஞ்சள் கயிறு

பழங்காலத்தில் அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்தபோது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. ‘தாலம்’ என்பது பனையோலையைக் குறிக்கும். அந்தப் பனையோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளையார் சுழியிட்டு ‘இன்னாருடைய மகளை, இன்னாருடைய மகன் மணந்து கொண்டார். வாழ்க’ என்றெழுதி, அதைச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. நாகரிகம் வளர்ந்த பிறகு (பனையோலை தண்ணீர் பட்டு நைந்து போவதால்) தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக் கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வமாதலின் கணவருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் தரித்துக் கொண்டனர்.

பெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கலநாண் உயிரினும் சிறந்தது. பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும், திருமாங்கல்யத்தைக் கழற்றக் கூடாது. சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழுது, எல்லா அணிகலன்களையும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அணி செய்து கொண்டிருந்தது.

முன்பு எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும்,திருமணத்திற்க்கு மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அதற்க்கு காரணம் ஒரு பெண்ணை பார்த்த உட‎ன் அவள் கழுத்தில் உள்ள தாலியை பார்த்த உட‎ன் அவள் திருமணம் ஆனவள் என்பதை உணரத்தா‎ன். பல வகை தங்க நகைகள் அவள் கழுத்தில் இருந்தாலும் அந்த மஞ்சள் கயிறு தாலியை மாற்ற மாட்டார்கள். தினம் குளிக்கும் போது அந்த கயிற்றுக்கும், முகத்திற்க்கும் மஞ்சள் தடவுவார்கள். அந்த கயிறு நிறம் மாறாமலும், வழுவாக இருப்பதிற்க்கும். அத்துடன் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவதால், வசீகரமும், தோல் வியாதிகள் வராமல் தடுப்பதுடன் முடிகள் முளைப்பதையும் தடுக்கும்.

உறவு முறைகள்

கல்யாணத்தின் போது ஏகபட்ட கூட்டம் வரும், அவர்கள் ஒவ்வருவருக்கும் கல்யாண வீட்டார்கள் மாப்பிள்ளை அல்லது மணமகள் வீட்டார்கள், உறவு முறைகளை விளக்கி கூறிக்கொண்டு இருக்க முடியாது. அதனால் தான் பல சடங்குகளும், சம்பிராதயமும் நம் திருமணத்தின் போது ஊருவாக்கினர்.மாப்பிளை யின் தங்கை அல்லது அக்கா இவர்களை அறிமுகபடுத்த, நாத்தி விளக்கு பிடித்து கொண்டு மணமக்கள் பின் நிற்பார்கள். மாப்பிள்ளையின் காலில் மிஞ்சு (மொட்டி)அனிபவர் மணமகளின் தங்கை அல்லது அக்காவாக இருப்பார்கள்.மணவரையில் மாப்பிளை கையை பிடித்து வளம் வருபவர் மணமகளின் தம்பி அல்லது அண்ணன் ஆவார். தாரை வார்த்து தருபவர் அப்பா, அம்மா, பொண்னுக்கு பட்டம் கட்டுபவர்கள் தாய்மாமன் மற்றும் மாமன் ஊறவு முறை என்பதையும், தெரிந்து கொள்வதற்காக இம்மாதிரி சடங்குகளை நம் முன்னோர்கள் கடை பிடித்தனர்.

அட்சதை

திருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள். க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள்: அகரம் அண்மைப் பொருளைத் தெரிவிக்கிறது. அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாதது என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல் உள்ளது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து, முறையோடு அதில் பன்னீர் தெளித்து, மஞ்சள்பொடி தூவி, அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவகளையுண்டாகும்.

அம்மி மிதித்தல்

மணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும். மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான். அதன் பொருள் ‘‘இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு’’ என்பதாகும். தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும். ஆனால், கல் வளையாது; பிளந்து போகும்.

மணமகளே! கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு. அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்த அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கௌதமர். அதனாலேதான் ‘நீ கல்லைப் போல் உறுதியாக இரு’ என்று, கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப் பற்றி அந்த அம்மிமேலே வைப்பது.

அம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள். அருந்ததி = அ+ருந்ததி (கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள்)

மிஞ்சி அணிதல்(மெட்டி)

பெண்களுக்கு தாலி எப்படி அவள் திருமணம் ஆனவள், என்பதை அடையாளம் காட்ட அமைந்ததோ, அது போல ஆண்களுக்கு திருமணம் ஆனவர் என்பதை அடையாளம் காட்டத்தான், அவர்கள் காலில் மிஞ்சி அதாவது மெட்டி அணியும் வழக்கத்தை நம் முன்னோர்கள் இந்த சடங்கை கடை பிடித்தனர். பிற்காலத்தில் இந்த பழக்கம் மறைந்து விட்டது அல்து மறுக்கப்பட்டது.

மங்கள இசை( நாதஸ்வரம்)

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொறு மங்கள நிகழ்ச்சியின் போது நாதஸ்வரம் இசைக்கப்படுவது வழக்கம். மணவிழாவில் போது இது கட்டாயம் இருக்கும். இசை கருவிகளிலேயே நாதஸ்வரம்தான் மிக இனிமையாகவும், அதிக ஓசை உடையதாகவும் இருக்கும். மணவிழாவின்போது உற்றார், உறவினர் என்று பலர் கூடுவார்கள். அவர்கள் அந்த இடத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரிப்பார்கள். அப்போது நல்ல விசயங்களும்,கெட்ட விசயங்களும் பேசும் சூழ்நிலை ஏற்படும். ஒரு நல்ல காரியம் நடை பெறும் போது மற்றவர்கள் பேசும் கெட்ட வார்த்தைகள் மணமக்களுக்கு காதில் விழுவது அபசகுணமாகவும், அந்த வார்த்தைகள் மனதிற்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும். அதனால் தான் நம் முன்னோர்கள் நாதஸ்வர இசையை இசைப்பதை வழக்கமாக கொண்டனர். ஏன் என்றால் நாதஸ்வர இசையின் ஒலியில் மற்றவர்கள் பேசும் சத்தம் கேட்காது, அத்துடன் தாலி கட்டும் போது கெட்டிமேளம் கொட்டுவதும் இதன் அடிப்படையில் வந்த வழக்கம்தான்.

திருமுருக கிருபானந்த வாரியார்

Leave a Reply

Your email address will not be published.