உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க முடியுமா
6 min readமுதலில் உங்கள் உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சென்டிமீட்டரில் உள்ள உங்கள் உயரத்துடன் 100ஐக் கழித்தால் வருவது உங்கள் எடையின் தோராய அளவு. இதிலிருந்து கூடுதலாக அல்லது குறைவாக 5 கிலோ இருக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது மட்டுமே எடை குறைக்க முயற்சிக்க வேண்டும்.
உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கும் சிகிச்சைகள் நிறைய இருக்கின்றன. மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்றலாம்
இன்றைய காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. மேலும் தினமும் உற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பயிற்சி செய்தால் போதுமானது. சிலர் ஜிம்முக்கு செல்ல நேரம் இல்லாத காரணங்களால் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
அவர்கள் வீட்டில் இருந்தபடியே சில எளிய பயிற்சிகளை செய்து வரலாம். உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் முன்னர் உங்கள் உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
சென்டிமீட்டரில் உள்ள உங்கள் உயரத்துடன் 100ஐக் கழித்தால் வருவது உங்கள் எடையின் தோராய அளவு. இதிலிருந்து கூடுதலாக அல்லது குறைவாக 5 கிலோ இருக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது மட்டுமே எடை குறைக்க முயற்சிக்க வேண்டும். . நடைப்பயிற்சி, ஜிம் உடற்பயிற்சி, சின்னச் சின்ன உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே பருமனைக் கட்டுப்படுத்திவிடாது. உணவுப் பழக்கம், வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.
காலையில் தேவையான அளவு உணவு, மதியம் அளவான உணவு, இரவு வேளையில் பாதி வயிறு உணவு என எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி இருப்பதால் உங்களால் கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாது. பதிலாக வீட்டு வேலைகளை குனிந்து, நிமிர்ந்து செய்து பாருங்கள். எடை தானாகவே குறையும்.