செரிமானக் கோளாறை போக்கும் ஓமம்
7 min readவாயு வெளியேற்றம்
வாயு பிரச்சனையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம் கருப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீக்கி விடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல், குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும்.
செரிமானக் கோளாறு
சரியான முறையில் செரிமானம் ஆகாததால் செரிமானக்கோளாறு ஏற்பட்டு குடலில் புண் ஏற்படும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க சாப்பிட்ட பிறகு ஓமத்தை எடுத்து வாயில் போட்டு மென்று கொள்வதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்க முடியும்..
ஈறுகளில் வீக்கம்
ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் ஓம எண்ணெய் ஒரு துளி அளவு சேர்த்து சில நிமிடங்களுக்கு பின் வாயில் ஊற்றி 5 நிமிடத்திற்கு பின் அலசிவிடவேண்டும். இப்படி செய்வதால் வாய் நாற்றம், ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம் அனைத்திலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
மூட்டு வலிகள்
ஓம(ணீழீஷ்ணீவீஸீ) எண்ணெய்யை கடுகு சேர்த்து சுடவைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் மஜாஜ் செய்வது போல நன்கு தடவினால் மூட்டுவலிக்கு தீர்வு காணலாம்.
வலி மற்றும் காயங்கள்
ஓம விதைகளுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல செய்து காயங்கள் ஏற்பட்ட இடத்தில் போட வலி மற்றும் வீக்கங்கள் குணம் பெறும்.
வயிறு வலி
வயிற்று வலியால் அவதிப்படுவோர் சூடான தண்ணீரில் மிளகு 1 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும். அரிப்பு, படை, எக்ஸிமா போன்றவைகளுக்கு கொதிக்கும் தண்ணீரில் ஓமத்தைப்போட்டு வெந்ததும் அதை பேஸ்ட்டாக செய்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் ஏற்படும் பருக்களிலும் தடவலாம்.