December 22, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

நகங்களை பாதுகாக்கும் மருதாணி…

5 min read
மருதாணி

 

மருதாணிநகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது நல்லதல்ல. நகங்களுக்கு சாயம் பூசி அழகுபடுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும்.

சாதாரணமாக நாம் இதற்கு மருதாணி இலைகளையே பயன்படுத்துகிறோம்.மருதாணி அரைக்கும் போது நன்கு வெண்ணெய் போல் அரைப்பது சிறந்ததாகும். அப்போதுதான் அது நகங்களில் நன்றாக பற்றும். மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும்.

விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும். நகங்களுக்குப் பூசிய பின்னர், உள்ளங்கைகளில் அழகிய வேலைபாடுகள் அடங்கிய, கவர்ச்சி பொருந்திய “டிசைன்களை” மருதாணியைக் கொண்டு இடலாம்.

உள்ளங்கை அளவே உள்ள அட்டைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் அழகான டிசைன்களை வரைந்து, நடுவில் வெட்டி எடுக்கவும். பின், டிசைன்கள் வெட்டப்பட்ட அட்டையை உள்ளங்கையில் வைத்து, அதன் மீது மருதாணி விழுதை நன்கு பரப்பி அதன் இலையை வைத்து கட்டிடவும்.

மறுநாள் மருதாணியை எடுத்துவிடும் போது கைகளில் அழகான டிசைன்கள் அமைந்து விடும். உள்ளங்கைகளைச் சுற்றிப் பொட்டுகள் வைப்பதும் உண்டு. மருதாணியைத் தவிர, பலரகச் செயற்கைப் பூச்சுகளைப் பலர் உபயோகிப்பதுண்டு.

சிவப்பில் பல ரகங்களில் இது கிடைக்கும் இயற்கை நிறத்திலும் உண்டு. இயற்கை நிற பூச்சு நகத்திற்கு தனி நிறம் கெடாது. ஒருவித பளபளப்பை மட்டும் உண்டு பண்ணி மெருகேற்றி விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published.