கறிவேப்பிலை
7 min readஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, 2 டம்ளர் தண்ணி விட்டு, அரை டம்ளரா ஆகுறவரை நல்லா கொதிக்க வெச்சு குடிச்சா… மலச்சிக்கல் இல்லாம இருக்கலாம். கறிவேப்பிலையை துவையல் செஞ்சு சாப்பிட்டு வந்தா… வாந்தி, பேதி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல்னு வயிறு சம்பந்தமான நோய்கள் சரியாகும். சுக்கு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை எல்லாம் சம அளவு எடுத்து, பொன் வறுவலா வறுத்து பொடியாக்குங்க. ஒரு உருண்டை சாதத்துல, அரை டீஸ்பூன் அளவுக்கு இந்தப் பொடியைப் போட்டு, நெய் விட்டு சாப்பிட்டா… ஜீரண உறுப்புகள் எல்லாம் வலுவாகும்.
வேப்பிலை மாதிரி, கறிவேப்பிலையையும் மஞ்சள் சேர்த்து அரைச்சி பூசிட்டு வந்தா… முகப்பரு, தேமல் மட்டுமில்ல, மற்ற தோல்நோய்களும் சரியாகும்.
கடுமையான காய்ச்சலால கஷ்டப்படுறவங்களுக்கு இந்த கறிவேப்பிலை கைகொடுக்கும். கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க. கூடவே துளசி ஒரு கைப்பிடி, ஆடாதொடை இலை ஒண்ணு, வேம்பு ஒரு ஈர்க்கு, ஒரு டீஸ்பூன் சீரகம் இதையெல்லாம் ஒண்ணா போட்டு, 4 டம்ளர் தண்ணி விட்டு 2 டம்ளராகுற வரை கொதிக்க வையுங்க. இதை 2 மணி நேரத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் குடிச்சுட்டு வந்தா… எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் சரியாயிரும். காய்ச்சல் இருந்தா 2, 3 நாள் வரை இதை குடிச்சா… நிச்சயம் பலன் கிடைக்கும்.