எல்லாவித காய்ச்சலும் குணமாக…
15 min readஒரு பக்கம் அலோபதி மருத்துவம் நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வருகிறது. இன்னொரு பக்கம் மாற்று மருத்துவமும் அதிகளவு முன்னேறி வருகிறது. அதில் மூலிகை மருத்துவம் முதலிடத்தில் உள்ளது.
நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய 15 அடி வரை வளரக் கூடிய குறுஞ்செடி.
மருத்துவக் குணங்கள்:
இதன் இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும். இது அளவில் குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக கொடுத்தால் போதும்.
இதன் இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் 1 டம்ளரில் கலந்து 2 வேளை குடித்து வர, சீத பேதி, இரத்த பேதி குணமாகும்.
இதன் இலை 10 எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம் இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி நீங்கும்.
இதன் வேருடன், கண்டங்கத்திரி வேர் சமஅளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து தேனில் கலந்து, 2 வேளையாக தொடர்ந்து சாப்பிட்டு வர, நரம்பு இழுப்பு, சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளிக் காய்ச்சல், என்புருக்கி, குடைச்சல் வலி குணமாகும்.
இதன் இலையையும், காய்கள் இலைகளையும் வகைக்கு 1 கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகக் குடித்து வர, கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி குணமாகும்.
உலர்ந்த இலையை பொடிசெய்து ஊமத்தை இலையில் சுருட்டு புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும்.
இதன் இலை, கோரைக் கிழங்கு, பற்பாடகம், விஷ்ணு காந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங் கோரை, சீந்தில் வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 4 வேளை 50 மில்லியளவு குடித்து வர, எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.
இதன் வேரை 50 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு, 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாக கடைசி மாதத்தில் கர்ப்பிணிப் பெண்கள் குடித்து வர, சுகப் பிரசவம் ஆகும்.
இதன் இலை, துளசி, குப்பைமேனி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க விஷம் முறியும்.
இதன் இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.
இதன் இலையுடன் வேப்ப மர இலை, அரிவாள்மனைப் பூண்டு இலை, சிறியா நங்கை இலை சம அளவாக எடுத்து அரைத்து, புண்கள் மீது பற்றுப் போட, புண் ஆறி தழும்பும் மறையும்.
இதன் இலையுடன் குப்பை மேனியிலையும் சம அளவாக எடுத்துச் சேர்த்து அரைத்து, பாவாடையின் நாடாப் புண் உள்ளவர்கள் இடுப்பைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, புண் ஆறி கறுப்புத் தழும்பும் மறையும்.
அம்மான் பச்சரிசி
ஒரு அடி வரை வளரும் செடியினம். மெல்லியத் தண்டுப் பகுதியில், வரிசையாக எதிரும் புதிருமாக இலைகள் அமைந்திருக்கும். ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். எதிர் அடுக்கில் கூர் நுணிப் பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளுடையது. இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வளர்கின்றது.
வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், உடல் சூடு தணியவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயல்படும்.
இதன் வகைகள்: பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்யைம்மான் பச்சரிசி, வயலம்மான் பச்சரிசி.
மருத்துவக் குணங்கள்:
இதன் இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.
இதன் இலையுடன் அதேயளவு தூதுவளை இலையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, உடல் பலப்படும்.
இதன் இலையுடன் கீழாநெல்லியிலையையும் சம அளவாகச் சேர்த்து எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு 1 டம்ளர் எருமைத் தயிரில் சாப்பிட்டு வர, உடல் எரிச்சல், நமைச்சல், மேக இரணம், தாது இழப்பு நீங்கும்.
இதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.
இதன் இலையை கிள்ளினால் பால் வரும். அதைத் தடவி வர, நகச்சுற்று, முகப்பரு, பால் மரு, கால் ஆணி வலி குறையும்.
இதன் இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.
இதன் இலை 15 எடுத்து அரைத்து, 1 டம்ளர் பசும் மோரில் கலந்து காலை, மாலை குடித்து வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு, வெள்ளைச் சொட்டு குணமாகும். (உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும். சாதத்தில் பசும்பால் சேர்க்கலாம். டி, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்