December 21, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

குப்பை மேனி…

11 min read
kuppai-meni, kuppai mani, ACALYPHA INDICA, EUPHORBIACEAE, பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி
kuppai-meni, kuppai mani, ACALYPHA INDICA, EUPHORBIACEAE, பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி
1) வேறுபெயர்கள் :- பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி.
2) தாவரப்பெயர் :– ACALYPHA INDICA.
3) குடும்பம் :- EUPHORBIACEAE.
4) வளரும் தன்மை :- இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. குப்பை மேனிக்கு அருகில் பூனை வராது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குனான், ஸ்டீரால்ஸ் மற்றும், சைனோஜெனிக் க்ளைக்கோஸைடு போன்ற மிகவும் விஷம் வாய்ந்த வேதிப் பொருட்களையும் உடையது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். எரிப்புகுணமுடையது.வசீகரப்படுத்தும்இயலடையது.
மாந்திரீக மூலிகையாகும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.
5) பயன்தரும் பாகங்கள் :- செடி முழுதும் மருத்துவப்பயனுடையது.
6)பயன்கள் :- நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
சமூல சூரணம்
1 சிட்டிகை நெய்யில் காலை மாலைஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.
வேர்சூரணம்
1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவுகொடுக்கவும்.
இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும். இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும் இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.
மூலநோய் :- மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள்நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டுவகை எனவும், கூறுவர். அவைஇவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலைசாப்பிடுக, 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்மோரில் சாப்பிடுக. புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.
நாடாப்பூச்சி, புழு – குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகிய வற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.
விடம் :- குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியன வற்றில் கடி வாயில்தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.
படுக்கைப்புண் :- ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இழஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.
தலைவலி :- இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.
சொறிசிரங்கு :- குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும்அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்துவர சொறி சிரங்கு படை குணமடையும்.
புண் :- எல்லாவகையான புண்களுக்கும் இதன்இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.
நன்றி : http://tmithun.blogspot.in/2010/12/blog-post_3012.html

Leave a Reply

Your email address will not be published.