இளநீரின் மருத்துவ பண்புகள்
6 min readஇளநீரின் மருத்துவ பண்புகள்
• ஜீரணக் கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் கைகண்ட மருந்தாகும்.
• உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.
• வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் இளநீரில் உள்ளன.
• இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.
• இளநீர் குடல்புழுக்களை அழிக்கின்றது.
• காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானம்.
• சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துகிறது.
• ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்கின்றது.
• சிறந்த சிறுநீர் பெருக்கி.
• சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
• சிறுநீரக கிருமி நீக்கியாக செயல்படுகின்றது.
• இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு உதவுகின்றது.
*விருப்பப்பட்ட நேரத்தில் இளநீரை அருந்த கூடாது. வழக்கமாக காலையில் இளநீர் அருந்துவதை பார்போம் ஆனால் அதில் நன்மை இல்லை. காலையில் இளநீரை அருந்துவதால் வயிற்றில் அமிலம் சுரப்பதை குறைத்துவிடும், பசி எடுப்பதை தடுத்துவிடும். வயிற்றில் எரிச்சல் உள்ளவர்களுக்கு காலையில் இளநீர் அருந்துவது சுகத்தை அளிப்பதாக இருந்தாலும் அது தற்காலிகமான சுகமே எனவே காலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
உணவை உண்டபின் அருந்துவதால் வாத, பித்த குற்றங்கள் அதிகமாவதைத் தடுக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும், மலச் சிக்கல் நீங்கும். அதிக பசி உண்டாகும். நோய் அணுகாது. உடல் மினுமினுக்கும்.
*காலை, மதியம் உணவு உண்டபின் இளநீரை அருந்துவது நல்லது. இளநீரை எப்பொழுது வேண்டுமானாலும் அருந்துவதும், குளிர் காலங்களில் அருந்துவதும் நல்லது அல்ல.
பச்சிளநீர் அருந்தினால் மேகம், பழைய சுரநோய்கள், கபம் இவற்றை நீக்கும், வயிற்றில் உண்டாகும் கிருமிகள், உடலில் எற்படும் யானை சொறி, கண்ணோய் இவற்றைப் போக்கும்.
தகவல் : தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சி.