January 2, 2025

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் வைக்கும் உணவுகள்

15 min read
சிறுநீரக-உணவுகள்ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும். இந்த நாளில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைபெறும். உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை. 

நீரிழிவால் மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும் சிறுநீரகப் பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக பிரச்சனை வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், சிறுநீரகப் பிரச்சனை வரும். 

சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக இரத்த அழுத்தமும் சிறுநீரகத்தை பாதிக்கும். எனவே அவ்வப்போது இரத்த பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும். 

ஆய்வு ஒன்றில் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நிறைய உணவுகள் உள்ளன என்றும், அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தை மட்டுமின்றி, உடல் முழுவதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது. சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

1) பூண்டு : 

பூண்டின் நன்மைகளை சொல்லவே வேண்டாம். இதனை அதிகம் சாப்பிட்டால், இதய நோய் வருவதை தவிர்ப்பதோடு, இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைப்பதோடு, உட்காயங்களையும் குறைத்துவிடும்.

2) பெர்ரிப் பழங்கள் : 

பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லி, ராஸ்பெர்ரி போன்றவை சிறுநீரகத்திற்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியது. இதனை சாப்பிட்டால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இயங்குவதோடு, குடலியக்கமும் முறையாக நடைபெறும்.

3) சிவப்பு குடைமிளகாய் : 

சிறுநீரக நோய் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சிவப்பு குடைமிளகாய் மிகவும் சிறந்த உணவுப் பொருள். இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, எந்த வகையான புற்றுநோயையும் வராமல் தடுக்கும்.

4) முளைகட்டிய பயிர்கள் : 

முளைக்கட்டிய பச்சைப் பயிர்களை டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது. இந்த முளைக்கட்டிய பயிர்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, சிறுநீரக கற்கள் வராமலும் தடுக்கும்.

5) முட்டைகோஸ் : 

முட்டைகோஸ் மிகவும் சிறந்த காய்கறி. இந்த காய்கறி சிறுநீரக இயக்கத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இத்தகைய காய்கறிகளையும் உணவில் அவ்வப்போது சேர்த்து வர வேண்டும்.

6) ஆப்பிள் : 

ஆப்பிள் சாப்பிட்டால், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, இரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகமும் சுத்தமாக இருக்கும். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்லது.

7) ஆலிவ் ஆயில் : 

அனைவருக்குமே ஆலிவ் ஆயில் பயன்கள் தெரியும். இந்த எண்ணெய் இதயத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. எனவே சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது நல்லது.

8) வெங்காயம் : 

வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டால், சிறுநீரக கற்களை வருவதை இயற்கையாகவே தடுக்கலாம். மேலும் இது சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

9) சிவப்பு திராட்சை : 

திராட்சை பிடிக்காது என்று ஒதுக்கிவிட வேண்டாம். ஏனெனில் திராட்சையும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதில் மிகவும் சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் சிவப்பு திராட்சையில் ஃப்ளேவோனாய்டுகள் இருப்பதால், இவை இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் மிகவும் சிறந்தது.

10) செர்ரி : 

செர்ரியில் வைட்டமின்கள் அதிகமாகவும், புரோட்டீன்கள் குறைவாகவும் உள்ளது. மேலும் இவை உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவைக் குறைத்து, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. ஆகவே இத்தகைய செர்ரிப் பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.

11) முட்டை வெள்ளை கரு : 

முட்டையின் வெள்ளைக் கருவில் அமினோ ஆசிட்டுகள் அதிகமாகவும் மற்றும் பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ளது. இதுவும் ஒரு சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் உணவுப் பொருட்களுள் ஒன்று.

12) மீன் : 

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், இவை சிறுநீரகத்தை நோய் தாக்காமல் பாதுகாக்கிறது. அதிலம் சால்மன், ரெயின்போ ட்ரூட், கானாங்கெளுத்தி, ஹெர்ரிங் மற்றும் சூரை போன்ற மீன்கள் ஆரோக்கியமானது.

13) காலிஃப்ளவர் : 

பச்சை இலைக் காய்கறிகளுள் காலிஃப்ளவரும் ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் இதில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகத்தை சீராக இயங்க வைக்கும். எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.