December 27, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

வாழைப்பழம்

9 min read
வாழைப்பழம், banana, vazhai
வாழைப்பழம்எல்லா சீசனிலும் கிடைக்கும் பழம் வாழைப்பழம்தான். முக்கனிகளில் முக்கியமான கனி இது. வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


என்ன சத்துக்கள்?

வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் 

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக்(Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சுக்ரோஸ்(Sucrose), பிரக்டோஸ்(Fructose) மற்றும் குளுக்கோஸ்(Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்(Fiber) கொண்டுள்ளது.

என்ன பலன்கள்?

குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வாழைப் பழத்தில் உள்ள பொட்டாஷியம் சத்து ரத்தம் உறைவதை தடுக்கும். இது சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவி மூளைக்கு செல்லும் ரத்தம் பாதிப்படைவதை தடுக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை ஏற்படுத்தும்.

டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.

வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. ரத்த சோகையை வராமல் பாதுகாக்கிறது.

வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.