December 22, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

பச்சை பட்டாணி

8 min read
பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி

ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, பழங்காலத்தில் இருந்தே விளையும் காய்கறிகளில் ஒன்றாகும். மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி, வணிகதானியங்களில் ஒன்றாகும். பெரும்பாலோர் பச்சை பட்டாணியை ஊட்டச்சத்து நிறைந்த காயாக கருதமாட்டார்கள்.

பச்சை பட்டாணியில் ப்ஹைடொநியூடிரிஷியன்ஸ் அதிகம் நிறைந்துள்ளதால் அதன் பலன்கள் ஏராளம்.

உழவனின் நண்பன்

பச்சை பட்டாணிகள் ஊட்டச்சத்து வாய்ந்தவை மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் ஏற்ப வளரும் தன்மை வாய்ந்தவை.

இவை மண்ணிற்கு அதிக பலன் தரும் நைட்ரஜன் பிக்சிங் செடி வகைகளை சார்ந்தவை ஆகும்.

மேலும் இவை ஆகாயத்தில் உள்ள நைட்ரஜனை உள் வாங்கி பயனளிக்கும் விதமாக வெளிக் கொணருகின்றது.

மண் அரிப்பை தடுக்கும் உபயோகமான தானிய செடியாகவும் இருக்கின்றது.

கெட்ட கொழுப்பு குறைக்கின்றது

பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம்.

இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும்.

இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான நோய்களில் இருந்து விடுபடலாம்.

இதயத்தை பாதுகாக்கும்

இதய நோய்களை தடுப்பதே இந்த பச்சை பட்டாணியின் மிக முக்கிய பலனாகும்.

இதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருட்களும் சிறிதளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும்

இன்று அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வதால், இந்த பச்சை பட்டாணி பெரிதும் உதவும்.

எப்படியெனில் இதில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவும் பலனை பெற்றுள்ளது.

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்

அதிக நார்ச்சத்தும் புரோட்டீன் சத்தும் நிறைந்துள்ள பச்சை பட்டாணிகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

 

வயிற்று புற்றுநோய்க்கு எதிரான காய்

பச்சை பட்டாணி வயிற்று புற்றுநோய்க்கு எதிர்த்து செயல்படும்.

நாள் ஒன்றிக்கு 2 மில்லிகிராம் பட்டாணி சாப்பிட்டால் புற்றுநோயை எதிர்க்க பெரிதும் வழிவகுக்கும்.

வலிமையான எலும்புகள்

வைட்டமின் கே நிறைந்துள்ள பச்சை பட்டாணி எலும்புகளை வலுவடையச் செய்யும்.

ஆஸ்டியோபோரோசிஸ் எதிராக செயல்படும் தன்மை வாய்ந்தது. மொத்தமாக, ஆரோக்கியமான வாழ்விற்கு பச்சை பட்டாணி மிகவும் அவசியமானதாகும்.

என்றும் இளமை

பச்சை பட்டணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் என்றும் இளமையாக வைக்க உதவும்.

இதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலம் போன்றவை இளமையாகவும், எனர்ஜியாகவும் வைக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published.