December 30, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

சிறியா நங்கையின் மருத்துவ பயன்கள்!

4 min read
சிறியா நங்கை

சிறியா நங்கை

சிறியா நங்கையின் மருத்துவ பயன்கள் :
சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி-மூலிகை குணபாடம் 

இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும்,இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.

இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை,மாலை இரு வேளையும் 2 -முதல் 4 – கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும்.

பாம்பு கடிக்கு இதன் இலையை க் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .

வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும் .(பற்பமாகும்) 

சர்க்கரை நோய்க்கு அனுபவ முறை :

சிரியா நங்கை இலைப் பொடி – நெல்லி முள்ளிப் பொடி – நாவல்கொட்டைப் பொடி – வெந்தயப் பொடி – சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனை காலை – மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.

Leave a Reply

Your email address will not be published.