December 30, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

இறால்களின் மருத்துவப் பயன்கள்..!

17 min read
இறால்

இறால்

மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை. மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினாலும் நமக்கு பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. அப்படி ஒரு வகை உணவு தான் இறால்.

உணவு அலர்ஜி

கடல் உணவுகளினால், இறால் உட்பட, அலர்ஜி ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். புது வகை மீன் அல்லது இறாலை உண்ணும் போது கவனமாக இருங்கள். அதே போல் அதிக அளவில் உட்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பல விதமான அலர்ஜிக்கு உள்ளாக நேரிடும்.

குறைவான மாதவிடாய் வலி

அனைத்து கொலஸ்ட்ரால்களும் சரிசமமாக உருவாவதில்லை. இறாலில் உபயோகமுள்ள கொழுப்பான ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் உள்ளது. இது ஒமேகா-6 கொழுப்பமிலங்களால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை சமநிலைக்கு திரும்பச் செய்யும். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியையும் குறைக்க உதவும். ஆகவே இதனை சாப்பிட்டால், இந்நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் இதர கொலஸ்ட்ரால் எதுவும் இல்லாமல் அவர்களின் பிறப்புறுப்புகளுக்கு சீரான முறையில் இரத்த ஓட்டம் இருக்கும்.

புற்றுநோயை எதிர்த்து போராடும்

இறாலில் அஸ்டக்ஸாந்தின் போன்ற கரோடினாய்டு உள்ளதால், அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காக்கும். மேலும் அதில் செலினியம் என்ற அரியக் கனிமம் உள்ளது. இது முன்னிற்குஞ்சுரப்பி மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

தைராய்டு ஹார்மோன்கள் சுரத்தல்

இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும். இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

மூளையின் ஆரோக்கியம்

இறாலில் கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம். கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக் கூடும். இது தசைகளுக்கு ஆரோக்கியத்தையும் திடத்தையும் அளிக்கும். மேலும் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரிக்கும். இதனால் ஞாபக சக்தி, புரிதல் மற்றும் கவனம் போன்றவற்றில் முன்னேற்றம் தென்படும். இறாலில் உள்ள அஸ்டக்ஸாந்தின் ஞாபக சக்த்தியை அதிகரிக்கவும், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.

எலும்பு ஆரோக்கியம்

இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும். எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி, அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.

இதயகுழலிய நோய்கள்

பல உணவுகள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் புளித்துப் போன இறால் பேஸ்ட்டில் பைப்ரினோலிடிக் என்சைம் உள்ளது. அதனால் அதனை இரத்த உறைவு முறிப்பான் தெரப்பிக்கு பயன்படுத்தலாம். இரத்த உறைவு முறிப்பான் தெரப்பி என்பது இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள ஆபத்தான இரத்த உறைவுகளை உடைப்பதாகும். இறால் பேஸ்ட்டில் உள்ள இந்த என்சைம், உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் தாக்கக் கூடிய இதயகுழலிய நோய்களால் ஏற்படும் ஆபத்தை எதிர்த்து போராடும். மேலும் இதில் அதிகளவில் ஒமேகா 3 கொழுப்பமிலம் உள்ளதால், கொலஸ்ட்ராலினால் இரத்த ஓட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும். அதனால் நெஞ்சு வலி மற்றும் வாத நோய் ஏற்படுவது குறையும்.

தலை முடி உதிர்தல்

இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும். ஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் ஏற்படும். தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் முடி கொட்டுதல் ஏற்பட்டாலோ அல்லது முடி வளர்ச்சி நின்று போனாலோ இறால்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.

கண் பார்வை சிதைவு

இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். முக்கியமாக கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும்.

வயதான தோற்றத்தை நீக்கும் குணங்கள்

சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. எந்தவித பாதுகாப்பும் இன்றி, சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும், அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும். இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும். அதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும்.

எடை குறைப்பு

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published.