December 21, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

ஆடாதொடா

17 min read

ஆடாதொடாஅறிவியல் பெயர் : “Adhatoda vasica”

ஆரோக்கியமான வாழ்விற்கு சித்தர்கள் பல காயகற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர் என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப்பட்ட மூலிகைகளில் ஒன்றான ஆடாதொடா தாவரம் சிறந்த காயகற்ப மூலிகையாகும்.

இந்த தாவரம் அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. மனிதர்கள் வாழ தேவையான அளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். மனிதனை பாதிக்கும் சுவாசம் தொடர்புடைய நோய்களுக்கு இது அருமருந்தாகும்.

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது. நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல இத்தாவரம் சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இந்தியா முழுவதும் குறிப்பாக வெப்ப மண்டலப்பகுதிகளில் இது அதிகம் வளர்கிறது. தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதொடா செழித்து வளரும் தன்மை கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

அனைத்து பாகங்களிலும் வாசிசின், வாசிசினைன், அராக்கிடிக்கிக், பெஹினிக், செரோடிக்,லிக்னோ செரிக், லினோலிக் மற்றும் ஒலியிக் அமிலங்கள் விதைகளில் உள்ளன. பெட்டைன், வாசிசினோன்,இன்டோல் டீ ஆக்ஸி வாசிசினோன், அனிசோட்டைன் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன.

நுரையீரல் நோய்களை நீக்கும்

மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இது காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதெடா சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் அறைகளில் உள்ள கசடுகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ஆடாதெடா தாவரத்தை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.

கனிகள், மலர்கள், இலைகள் மற்றும் வேர் போன்றவை பூச்சிகளை அகற்றும். நுண்கிருமிகளை அகற்றும், வலி அகற்றும், கபம் வெளியேற்றும், மயக்க மருந்தாக பயன்படும். பொடி, சாறு, உயிர்சாறு, கஷாயம் மற்றும் ஆல்கஹாலில் தீராத மார்புச்சளி, மூச்சுத்திணறல், இருமல், ஜலதோஷம், கக்குவான் இருமல் ஆகியவற்றிர்க்கு மருந்தாகும்.

கிராமப்புறத்தில் ஆடாதொடா இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.

கர்ப்பப்பையை பாதுகாக்கும்

இலைகளின் சாறு வயிற்றுப் போக்கு, சீதபேதி, சுரப்பிக்கட்டி போன்றவற்றிர்க்கு மருந்தாகும். மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. கஷாயம் மூச்சுத்திணறல் நோய்க்கு மருந்தாகவும் பயன்படும். வேர் பட்டையில் இருந்து கிடைக்கும் வாசிசின் என்ற ஆல்கலாய்டு ஆக்ஸிடோனின் மருந்து பிள்ளைப் பேற்றின் போதும், கருச்சிதைவு காரணியாகவும் செயல்படுகிறது.

கிராமப்புறத்தில் ஆடாதொடா இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு இந்த இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதொடா இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.

ரத்தத்தை சுத்தமாக்கும்

ஆடாதொடா இலை, தூதுவளை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம்பெறும். மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தொடாவுக்கு உண்டு.

குழந்தைகளுக்கு அருமருந்து

ஆடாதொடா இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். இதனை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.

ஆடாதொடா வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புகைச்சல் குணமாகும்.

வலிகளை நீக்கும்

கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதொடா காய்ந்த இலையுடன் வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் பொட்டலமாகக் கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால்

கண் நோய்களை தீர்க்கும்

மலர்கள் ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. கண் நோய்களை குணமாக்கும். காய்ந்த இலைகளை சுருட்டி புகைப்பது மார்புச்சளியைப் போக்கும். வீக்கம், நரம்புவலி, கட்டிகள், காயங்களுக்கு இலைகளின் பொடி பற்றாக பயன்படுகிறது. அடர்ந்த கஷாயம் சிரங்குகளுக்கு தடவும் மருந்தாக பயன்படும்.

Leave a Reply

Your email address will not be published.